05th November 2021 08:45:14 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறிமுறை படையணியின் சிப்பாய்களால் 24 மணிநேரமும் சிப்பாய்கள் சேவையில் ஈடுபடுதல் மற்றும் அரச நிதியை சேமித்து செலவீனங்களை மட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு, யாழ்ப்பாணத்தில் மீண்டும் பயன்படுத்த முடியாதென கருதி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 25 வாகனங்களை இராணுவத் தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கமைய அனைத்து உதிரிப்பாகங்களும் மாற்றியமைக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட பின்னர் புதன்கிழமை (03) பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
அதற்கமைய 10 பேருந்துகள், 5 ட்ரக் வாகனங்கள், 3 கவச வாகனங்கள், 5 மோட்டார் சைக்கிள்கள், 1 உழவு இயந்திரம் மற்றும் 1 கெப் ரக வாகனம் என்பவைகளை யாழ். குடாநாட்டின் தெரிவு செய்யப்பட்ட படைப்பிரிவுகள் மற்றும் படையணிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் போது யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் உயர்தரம் வாய்ந்தவையாக புதுப்பிக்கப்பட்ட வாகனங்களை நிகழ்வின் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
யாழ். குடாநாட்டிலுள்ள 4 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மத்திய வேலைத்தளத்திற்கான மேற்பார்வை விஜயத்தை மேற்கொண்டிருந்த யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களினால் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருந்த வாகனங்களை குறைந்த செலவில் தரமானதாகவும் பவனைக்கு உகந்த வகையிலும் மாற்றியமைக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய மேற்படி வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டிருந்தன.
அதன்படி பழுபார்க்கப்பட்ட கனரக வாகனங்கள் சோதனை சவாரிகளுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் ஒலி இயக்கங்கள் சீராண நகர்வு என்பவை தொடர்பிலும் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவற்றை பாவனையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மேற்படி வாகனங்களை கையளித்த பின்னர் ஜெனரல் ஷவேந்திர சில்வா வாகனங்களை பழுதுபார்த்த இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய்களுக்கு நன்றிகளை கூறிக்கொண்டதோடு, வாகன இறக்குமதிக்கான அந்நிய செலாவணியை குறைத்துகொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ். குடாநாட்டில் உள்ள யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு, வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி தளபதி, 4 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திரவியல் பொறிமுறை படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.