30th April 2020 09:45:35 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 511 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் கோவிட்-19 தொற்று நோயினால் பெரதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களுக்கு நிவாரண பொதிகள் & ஆடைகள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான விணகசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 511 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் திறம்பட குறித்த நிவாரண பொதிகளை வரிய மக்களுக்கு வழங்கி வைத்தினர்.
சாவல்கட்டு பிரதேச மக்களின் கஷ்ட நிலைகளை கருத்திற் கொண்டு யாழ் ஷெப்பர்ட் கான்வென்ட்டின் மத போதக சகோதரிகளினால் இக்குறித்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கப்பட்டது. அதேசமயம், யாழ் குடா நாட்டில் தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவையினை கருத்திற் கொண்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள 6ஆவது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் ஏனைய படையினரால் சின்னக்கடை மற்றும் குருநகர் பிரதேசத்தில் வசிக்கும் வரிய குடும்பங்களுக்கு ஆடைகள் வழங்கும் நிகழச்சி திட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டது. Sports Shoes | Ανδρικά Nike