Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2022 10:45:10 Hours

யாழ்.பொதுமக்களுக்கு ஓய்வு பூங்கா மற்றும் புனரமைக்கப்பட்ட வீதி திறந்து வைப்பு

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் இராணுவத் தளபதியாக பதவியேற்ற பின்னர் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கான தனது முதல் விஜயத்தின் போது, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்திற்கு மிக அருகில் உள்ள டி- சந்தியைச் சுற்றி அமைக்கப்பட்ட 'Harmony Theme Park'' ஓய்வு பூங்காவை திறந்து வைத்தார்.

கடல் கடற்கரைக்கு அன்மையில் அமைக்கப்பட்ட 'Harmony Theme Park' விசாலமான முறையில் அமரும் இருக்கைகள், பயிற்சி நடைபாதை தளங்கள், வெளிப்புற உடல் உடற்பயிற்சி பாகங்கள், விளையாட்டு நடவடிக்கைகளுக்கான கருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளதுடன் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரும் அந்த வசதிகளை பயன்படுத்தக்கூடிய ஒரு நிதானமான சூழலை கொண்டுள்ளது.

தீபகற்பத்தில் உள்ள உள்ளூர் நகரசபை அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களின் நெருக்கமான ஒத்துழைப்புடன் படையினரின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, அன்றைய திறப்பு விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள், நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்கில் பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட குறித்த புதிய பூங்காவைத் திறந்து வைத்தார். அமைதி, சுகாதாரம், ஓய்வு மற்றும் விளையாட்டு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தில் கவரப்பட்ட பிரதம விருந்தினர், வளாகத்தைச் சுற்றி பார்வையிட்டு தனது மகிழ்ச்சியை யாழ். தளபதியிடம் தெரிவித்தார்.

திறப்பு விழா முடிந்த சில நிமிடங்களில், பல வருடங்களாக மூடப்பட்டு, கவனிக்கப்படாமல், மற்று பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டுவான் - பலாலி வீதியை மீளத் திறந்து வைக்கும் நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்துகொண்டார். யாழ் பாதுகாப்பு தலைமையகத்தின் படையினர் இலங்கை பொறியியலாளர் படையணி மற்றும் பொறியாளர் சேவைப் படையணியின் படையினருடன் இணைந்து, வீதி அபிவிருத்தி அதிகார சபை பணியாளர்களின் ஆலோசனையில் இந்த இரண்டு சிறு நகரங்களுக்கிடையேயான வீதிப் பாதையை குறுகிய காலத்திற்குள் செப்பமிட்டு முழுமையாக புனரமைத்தனர். இதற்கான தொழில்நுட்ப வழிகாட்டலானது யாழ். தளபதியினால் வழங்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் பருத்தித்துறை மாநகர சபையின் மேயர், பருத்தித்துறை பிரதேச செயலாளர், 55 வது படைப்பிரிவின் தளபதி, பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.