Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd June 2020 10:12:10 Hours

யாழ்பாணத்தில் வரிய குடும்பத்தினரிற்கான மற்றுமொரு வீடு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்களால் யாழ் புங்குடுத்தீவில் வசிக்கும் மற்றுமொரு வரிய குடும்பத்திற்கு வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லானது 22 ஆம் திகதி திங்களன்று நாட்டப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் தியாஹி அறக்கட்டளையின் ஸ்தாபகரும் தலைவருமான திரு வமதேவ தியாகேந்திரன் அவர்கள் திரு கனபதிபிள்ளை தவராசா மற்றும் அவரது குடும்பத்திற்கான குறித்த வீட்டைக் கட்ட நிதி உதவி வழங்கினார்.யாழ் பாதுகாப்பு படைத் தளபதி , 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தளபதி மற்றும் 512 ஆவது பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் ,512 ஆவது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் கெமுனு ஹேவா படையணியின் 17 ஆவது பட்டாலியனின் படையினர் அதன் கட்டுமானத்திற்கு மிகவும் தேவையான மனிதவளத்தை வழங்கும்.

51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தளபதி , 512 ஆவது பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், நன்கொடையாளர் மற்றும் படையினர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.jordan release date | UK Trainer News & Releases