Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2021 23:00:08 Hours

மேல் மாகாணத்தில் அவசியமான வைத்தியசாலைகளுக்கு 16 ஒட்சிசன் உபகரணங்கள் வழங்கிவைப்பு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பணிப்புக்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, வடகொழும்பு போதனா வைத்தியசாலை ராகம மற்றும் கம்பஹா வைத்தியசாலை ஆகியவற்றிற்கு கொவிட் - 19 நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் பயன்பாட்டிற்காக 16 ஒட்சிசன் வழங்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவ பொறியியல் சேவை படைத் தளபதி பிரிகேடியர் ஓஎம்டி குணசிங்க அவர்களினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டபிள்யூ விக்கிரமசிங்க அவர்களிடம் 6 ஒட்சிசன் உபகரணங்களை வழங்கி வைத்தார். அத்தோடு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கான 4 ஒட்சிசன் உபகரணங்கள் அதன் பணிப்பாளர் வைத்தியர் சாகரிகா சிறிவர்தன அவர்களிடமும், வடகொழும்பு ராகம வைத்தியசாலைக்கான நான்கு ஒட்சிசன் உபகரணங்கள் வைத்தியர் ரணவீரவிடமும் கம்பஹா வைத்தியசாலைக்கான நான்கு ஒட்சிசன் உபகரணங்கள் தாதி டீஎச் உமேஷா அவர்களிடமும் வழங்கி வைக்கப்பட்டன.