Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2021 12:43:46 Hours

மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவு

இன்று காலை (07) நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1895 நபர்களுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 44 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் எஞ்சிய 1851 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களும் ஆவர் இதில் கொழும்பிலிருந்து 326 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 309 பேரும் கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்த 273 பேரும், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 943 பேரும் அடங்குவர் என கொவிட் பரவரலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் கூறுகிறது.

இன்று காலை (07) வரை இறந்தவர்கள் உட்பட மீன் சந்தை மற்றும் மினுவங்கொடை பிராண்டிக்ஸ் கொத்தணியின் 90,637 பேரும் நாடு முழுவதிலுமிருந்தும் 26,862 பேர் இனங்காணப்பட்டிருந்தனர் அவர்களில் 98,923 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் . புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் இன்று காலை (07) வரை கொவிட் தொற்றாளர்களாக 119,423 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 100,885 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலயத்தில் நாட்டில் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இன்று காலை (07) நிலவரப்படி 6,705 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 74 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காலை 0600 மணிவரையான கடந்த 24 மணித்தியாலயத்தில் 745 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை (07) இந்த வெளியீடு வெளியிடுகையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன