Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th May 2020 20:28:11 Hours

மேலும் பல இலங்கையர்கள் எமது நாட்டிற்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக கோவிட் மைய தலைவர் தெரிவிப்பு

இராஜகிரியிலுள்ள கோவிட் -19 தேசிய தடுப்பு செயல்பாட்டு மையத்தில் இன்று (20) ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் திருமதி பவித்ராதேவி வன்னியாரச்சி, கோவிட் தடுப்பு மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் மருத்துவ நிபுணருமான டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

முப்படையினரால் நிர்வாகித்து பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான ஜெட்விங் லெகுனிலுள்ள (54) பேரும், ஜெட்விங் ப்ளு (27) பேரும், வஸ்கடுவ சைட்ரஷ் (62) பேரும், ஹோட்டல் டொல்பினிலுள்ள (2) பேரும், மாதுரு ஓயாவிலிருந்து (77) பேரும், காலி பொலிஸ் கட்டிடத்திலுள்ள (5) பேரும்,கண்டியிலுள்ள பெல்வுட்டிலிருந்து (2) பேரும் , கடற்படை ருவல்ல முகாமிலிருந்து ஒருவரும் தனிமைப் படுத்தலின் பின்பு மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களுடன் இன்று (20) ஆம் திகதி இவர்களது வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று (20) ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 10103 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வைத்திய சான்றிதழ்களுடன் தங்களது வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளவியல் ரீதியாக முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தற்போது 3519 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இன்றைய தின நிலவரப்படி கடற்படையிலுள்ள 578 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்த இடையில் 221 பேர் பூரன குணமாகி பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு வெளியேற்றப்பட்டதுடன் 357 கடற்படையினர் இன்னும் மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ரஷ்யா மற்றும் அன்றைய நாடுகளிலிருந்து அடுத்த இரண்டு நாட்களில் அதிகமான நபர்கள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர் இவர்களையும் இலங்கையிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி அவர்கள் இந்த ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார். Sport media | Klær Nike