Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2023 20:57:42 Hours

மேலும் ஒரு தொகை உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் விடுகை

அதிகாரிகளுக்கான உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்: 15, உயர் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி-எண்: 45 மற்றும் உதவி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி-எண்: 128 ஆகியவற்றின் விடுகை அணிவகுப்பு பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (மே 08) நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் பொறியியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இராணுவ உடற் பயிற்சி பயிற்சி நிலையத்தின் தளபதி கேணல் கேஏடிசிஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ இன் அழைப்பின் பேரில், இராணுவ உடல் பயிற்சி நிலையத்தின் தளபதி பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் சில சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் வழங்கப்பட்டன.

77 நாட்கள் இடம் பெற்ற உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்:15 இல் 10 அதிகாரிகள் பின்பற்றினர். இப் பாடநெறியில் சிறந்த மாணவராக கொமாண்டோ படையணியின் லெப்டினன் ஜேவிஏகே பிரதீப் பெற்று கொண்டார். சிறந்த உடற்தகுதி வீரருக்கான விருதை பொறியியல் காலாட் படையணியின் கெப்டன் டபிள்யூஎம்ஐஎல் அபேரத்ன பெற்று கொண்டார்.

65 நாட்கள் நடத்தப்பட்ட உயர் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்-45 இல் 18 படையினர் பின்பற்றினர். இப் பாடநெறியில் கொமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் பீஎம்பீஎன் முனசிங்கவும் சிறந்த உடற் தகுதி சிப்பாயாக இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய் எகேஎம்ஆர் ஹெட்டியாராச்சியும் விருதுகளை பெற்றுக்கொண்டார். சிறந்த பெண் சிப்பாயாக இலங்கை இராணுவ மகளிர் படையணியில் சிப்பாய் கேஎம்பீ மதுசாரவும், சிறந்த உடற் தகுதி வீராங்கனையாக இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கோப்ரல் எம்கேசிஜி லலிந்திராவும் தெரிவு செய்யப்பட்டனர்.

63 நாட்கள் இடம் பெற்ற உதவி உடற் பயிற்சி பாடநெறி எண்-128 153 படையினர் தகுதி பெற்றனர். பாடநெறியின் சிறந்த சிப்பாய்கான விருது லான்ஸ் கோப்ரல் எச்எம்எஸ்என் செனவிரத்னவிற்கும் சிறந்த உடற் தகுதிக்கான விருது கஜபா படையணியின் சிப்பாய் ஆர்பீஎஸ்டி ராஜபக்ஷவிற்கும், சிறந்த இலங்கை தடைதாண்டல் வீரராக இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய் ஏஎம்ஜே. அத்தநாயக்கவிற்கும் வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சிப்பாய் டிஎம்என்ஜிடி குமாரி பெற்று கொண்டார். சிறந்த கட்டளைக்கான விருதைப் விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்எம்ஆர்சி ரத்நாயக்க பெற்றுக் கொண்டார்.

இராணுவ உடற்பயிற்சி பயிற்சி நிலையத்தின் தளபதியின் அழைப்பின் பேரில் மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பரிசளிப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.