Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 13:50:16 Hours

மேலும்மொரு தொகை மஞ்சள் மீட்பு

143 வது பிரிகேடின் கீழ் உள்ள 16 வது கஜபா படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய தப்போவ - புத்தளம் வீதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படையினரால் கல்பிட்டி - துடாவ கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 516 கிலோகிராம் கடத்தல் மஞ்சளை வெள்ளிக்கிழமை (29) இரவு வேளையில் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட கடத்தல் மஞ்சள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டலின் கீழ், 143 பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.