Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2021 16:30:38 Hours

மேலுமொரு தொகை கடத்தல் மஞ்சள் மன்னாரில் மீட்பு

54 வது படைப்பிரிவின் புலனாய்வுப் படையினர், 7 வது விஜயபாகு காலாட்படைப் படையினருடன் இணைந்து 390 கிலோ கடத்தல் மஞ்சள் தொகையை சனிக்கிழமை (7) மன்னாரில் இருந்து மீட்டனர்.

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டதாகக் கருதப்படும் கடத்தல் மஞ்சள் தொகை 7 வது விஜயபாகு காலாட்படை விரைவு எதிர்வினை நடவடிக்கை குழுவினரால் மீட்கப்பட்டதுடன், அதன் பெறுமதி 2.34 மில்லியன் ரூபாய்கள் என மதீப்டு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை மீட்கப்பட்ட மஞ்சள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 54 வது படைப்பிரிவுப் படையினர், மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் மட்டுப்படுத்தல், கடும் கண்காணிப்பு பணிகளுக்கு மத்தியில் , இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா மற்றும் மஞ்சள் கடத்தலைத் தடுப்பதற்கான பணிகள் என்பவற்றை ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த ஜூன் மாதத்திலிருந்து 245 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு மஞ்சள் கடத்தல் மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுத்துவோரை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை 54 வது பிரிகேட் சிப்பாய்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.