மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 300 படையினரால் திங்கட்கிழமை (23) பனாகொடை ஸ்ரீ போதிராஜராமயில் இடம் பெற்ற இரத்த தான நிகழ்வில் நோயாளர்களின் நலன் கருதி இரத்த தானம் வழங்கப்பட்டது.
நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய இரத்த மாற்று நிலையத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால்புஸ்ஸல்லா அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய 75 வது சுதந்திர தினத்துக்கு இணையாக இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்விடத்திற்கு வருகை தந்ந மேற்குத் தளபதி தங்கள் மருத்துவ ஊழியர்கள் மற்றும் நன்கொடையாளர்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந் நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் பொது பணி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள கட்டளைப் பிரிவுகள், பிரிகேட்டுகள், படையலகுகள், படையணிகளின் கீழ் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 300 இராணுவத்தினர் தாமாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர் என்பது குறிப்பிடதக்கதாகும்.