29th February 2024 18:37:21 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பகத்துடன் இணைந்து 2024 பெப்ரவரி 27-28 திகதிகளில் குற்றத் தடுப்பு குறித்த விரிவுரை தொடரை நடாத்தியது. மேற்கு பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அத்தியாவசிய அறிவு மற்றும் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான உத்திகளுடன் தரத்தினை மேம்படுத்து குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
1 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி கட்டளை அதிகாரி மேஜர் வீஎன்டப்ளியூ ஜயசேகரம் அவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கொலைகள், நிதி மோசடிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை தவறாகப் பயன்படுத்துதல், போதைப்பொருள் பாவனை/கடத்தல், சிறுவர் கடத்தல், துஷ்பிரயோகம், கற்பழிப்பு, திருட்டு மற்றும் நிகழ்நிலை சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தலைப்புகளில் நுண்ணறிவுமிக்க விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் 31 அதிகாரிகள் மற்றும் 694 சிப்பாய்கள் கலந்து கொண்டனர். மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.