13th October 2023 20:48:15 Hours
மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் வியாழக்கிழமை (12) அன்று மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக கடமைகளை பெறுப்பேற்றார்.
அவர் வளாகத்திற்கு வந்ததும் 6 வது கஜபா படையணி படையினரால் இராணுவ மரபுகளுக்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
முறையான இராணுவ சடங்குகளைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது புதிய பொறுப்பை ஏற்று உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். தொடர்ந்து அந்நாளின் நினைவாக பிரதான அலுவலக வளாகத்தின் முன் மரக்கன்று ஒன்றினை நட்டு குழு படம் எடுத்துக்கொண்டார்.
அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தின் போது மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் படையினருக்கான முறையான உரைக்கு முன்னர் படையினருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். உரையின் போது ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் வெற்றியை அடைவதில் அதன் முக்கிய பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். தொடர்ந்து அவரது இலக்குகளை அவர் கூறியதுடன் இந்த நோக்கங்களை கூட்டாக தொடர படையினருக்கு உத்வேகம் அளித்தார்.
14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நாள் விழாவில் பங்கேற்றனர்.