Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2020 10:39:25 Hours

மேற்கு பாதுகாப்பு படையினருக்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மேற்கு பாதுகாப்பு சிவில் பாதுகாப்பு சிவில் விவகார அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் படையினருக்கு 06 ஆம் திகதி புதன்கிழமை சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதில் 2000 முகவுறைகள், 50 லிட்டர் கை கிருமி தொற்று நீக்கி , 04 டிஜிட்டல் வெப்பமானிகள் மற்றும் 08 கை கழுவும் தொட்டிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி கேணல் என் மகாவித்தான அவர்களால், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படைத் தலைமையகங்களில் பணிப்புரியும் படையினர்களுக்கு விநியோகிப்பதற்காக மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. bridge media | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ