Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd June 2020 12:12:10 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி 143 ஆவது தலைமையக பிரதேசங்களுக்கு விஜயம்

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்கள் புத்தளத்தில் அமைந்துள்ள 143 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 16 ஆவது கஜபா படையணி மற்றும் 1 ஆவது தேசிய பாதுகாப்பு படையணிக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை இம் மாதம் (22) ஆம் திகதி மேற்கொண்டார்.

அத்துடன் கோவிட் – 19 தனிமைப்படுத்தல் மையமான டொல்பின் ஹோட்டலுக்கும் விஜயத்தை மேற்கொண்டு அதன் நிலைமைகளை கவனித்து சுகாதார அதிகாரிகளுடன் உரையாடல்களையும் மேற்கொண்டு அந்த வளாகத்தினுள் மரநடுகையையும் மேற்கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எ ம்.பி.டி ஹங்கிலிபொல மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike Sneakers | Nike