Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2021 22:38:22 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி பரீட்சார்த்த விஜயம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக பதவியேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா வெள்ளிக்கிழமை (09) காலியிலுள்ள 61 வது படைப்பிரிவிற்கு பரீட்சார்த்த விஜயமொன்றை மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதிக்கு 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரஸே்ட அதிகாரிகளால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து முகாம் வளாகத்தை மேற்பார்வை செய்யும் முன்பாக அவரது வருகையின் நினைவாக மரக்கன்று ஒன்றினை நாட்டி வைப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது.

அதனைடுத்து அக்னீமன ருஹுனு தேசிய கல்வி நிலையத்திலுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்திற்கு தளபதி விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு அவர்களினால் நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர், மாபலன விவசாய கல்லூரியில் அமைந்துள்ள நனிமைப்படுத்தல் மையத்திற்கான விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், 3 வது கெமுனு ஹேவா படையணியின் முகாமையும் மேற்பார்வை செய்தார்.