13th February 2020 10:03:07 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படையினர்களுக்கு ‘தற்கொலைகளைத் தடுப்பு’ தொடர்பாக விரிவுரைகள் இம் மாதம் (12) ஆம் திகதி பனாகொடையிலுள்ள பொது சேவை படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவீந்திர சில்வா அவர்களது எண்ணக்கருவிற்கமைய இராணுவ தடுப்பு மருந்து மற்றும் மன ஆரோக்கிய பணிப்பாளர் அவர்களது தலைமையில் 25 அதிகாரிகள் மற்றும் 195 படை வீரர்களது பங்களிப்புடன் இந்த செயலமர்வு நடைபெற்றன.
இராணுவ தடுப்பு மருந்து மற்றும் மன ஆரோக்கிய பணிப்பாளர் கேர்ணல் ஆர்.எம்.எம் மொனராகல அவர்கள் இராணுவத்தினருக்கு இந்த விரிவுரைகளை வழங்கி வைத்தார். இதன் போது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Sports News | Nike Shoes