Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 18:15:02 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இராணுத்தின் “முன்நகர்விற்கான மூலோபாய இராணுவ கோட்பாடுகள்” தொடர்பில் கட்டளை அதிகாரிகளுக்கு விரிவுரை

‘இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025’ இற்கு இணையாக “இராணுவ கோட்பாடுகள்: சேவைக்கான கட்ளை மற்றும் கட்டளைக்கமைவான பொறுப்பகளை நிறைவேற்றுவதற்கான தலைமைத்துவம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள படையணிகளின் கட்டளை அதிகாரிகளுக்காக பனாகொடவில் உள்ள மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 27-28 ஆம் திகதிகளில் செயலமர்வுகள் நடமத்தப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ சேனாரத்யாபாவினால் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி இரண்டு நாள் செயலமர்வில் பங்குபற்றிய அதிகாரிகள் தங்களது சேவைத் திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கான தெரிவுகளையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த செயலமர்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா உள்ளடங்களாக சில சிரேஸ்ட அதிகாரிகள், 61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே, 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன, இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் கொழம்பதந்திரி, இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரொபின் ஜயசூரிய, இராணுவ பயிற்சி பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கபில தொலகே, இராணுவ ஊடக பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, இராணுவ செயலக கேணல் (பொது) கேணல் சுஜீவ ரத்நாயக்க, முன்னோக்கு திட்டமிடல் மற்றும் செயற்படுத்துதல் பிரிவின் பதவி நிலை அதிகாரி I லெப்டினன் கேணல் டீஎம்வீஎம்ஆர் திஸாநாயக்க, இலங்கை இராணுவ கவசப் படையின் பதவி நிலை அதிகாரி 2 (நீதி) டீசீ த ஏ திஸாநாயக்க உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் பலரது பங்கேற்புடன் “இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025” இற்கு அமைவாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களின் தன்மை, பாதுகாப்பதற்கான சந்தர்ப்பங்கள், அனர்த்தம் மற்றும் முன்னேற்பாடுகள் என்பன தொடர்பாக கட்டளையிடும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டன.