Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th November 2023 11:56:20 Hours

மேற்கு படையினருக்கு 'இராணுவ இலக்கியம்' மற்றும் 'பெருமைமிக்க சிப்பாய்' பற்றிய விரிவுரை

மேற்குபாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அழைப்பின் பேரில் 'ரணவிருவா' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான உளவியல் செயற்பாடு பணிப்பகத்தின் லெப்டினன் கேணல் எஸ்.சி எதிரிசிங்க, மற்றும் மேஜர் எம்.எச்.எம்.எஸ் பண்டார எல்எஸ்சி ஆகியோர் புதன்கிழமை (08)4வது பீரங்கி படையணியின் கேட்போர்கூடத்தில்' இராணுவ இலக்கியம்' மற்றும் 'பெருமை மிக்க சிப்பாய் என்ற தலைப்பில் விரிவுரையை நடாத்தினர்.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் கே.டி.பீ டி சில்வா ஆர்எஸ்பீ பீஎஸ்சி என்டியூ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 18 அதிகாரிகள் மற்றும் 90 சிப்பாய்களின் பங்கேற்புடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

முதல் கட்ட விரிவுரையை மேஜர் எம்.எச்.எம்.எஸ். பண்டார எல்எஸ்சி அவர்கள் 'பெருமைமிக்க சிப்பாய்' என்ற தலைப்பில் நிகழ்த்தியதுடன், இராணுவத்திலிருந்து இடைநின்றவர்கள், பணமோசடி, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பலம் பலவீனம் வாய்ப்புக்கள் பிரச்சினைகளை இனங்கானல் (SWOT) பகுப்பாய்வு போன்ற சில முக்கிய விடயங்களை கலந்துரையாடினார்.

இரண்டாம் கட்ட விரிவுரையை லெப்டினன் கேணல் எஸ்.எதிரிசிங்க அவர்களால் நிகழ்த்தப்பட்டது, இதில் போர்க்களத்தின் நினைவுகள் வேகமாக மறைந்தாலும், அவர்களின் விலைமதிப்பற்ற தருணங்கள், தியாகங்கள், போரின் போது தாய்நாட்டிற்காய் அவர்களின் ஈடு இணையற்ற மற்றும் எண்ணற்ற தியாகங்களை எடுத்துக் காட்டினார்.

விரிவுரையாளர் இலங்கை இராணுவ இலக்கியத்திற்கு இலங்கைப் போரை அடிப்படையிலான படைப்புகளை தொகுத்துள்ளார்.

பிரிகேடியர் பொதுப்பணி, கேணல் பொதுப்பணி, கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி, உதவி கேணல் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விரிவுரையில் கலந்து கொண்டனர்.