Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2024 15:45:45 Hours

மேற்கு தளபதி முதலாவது இலங்கை இராணுவ சேவை படையணிக்கு விஜயம்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ 11 டிசம்பர் 2024 அன்று முதலாவது இலங்கை இராணுவ சேவை படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த அவரின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை இராணுவ சேவை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேஎன்எம்என் மெதகெதர யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்களால் மரிதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் அவர் ஒரு குழு படம் எடுத்துகொண்டதுடன், முதலாவது இலங்கை இராணுவ சேவை படையணியின் பணி, தற்போதைய செயல்பாடுகள் மற்றும் தற்போதைய திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை பெற்றார்.

பின்னர், படையலகின் அலுவலக வளாகம், உணவு கடைகள், வாகன சேவை நிலையம் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், பணியாளர்களின் செயல்பாட்டு தயார்நிலை மற்றும் திறன்களை மதிப்பீடு செய்தார்.

இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.