Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2020 18:01:39 Hours

மேற்கு தலைமையகத்திற்கு புதிய தளபதி நியமனம் மற்றும் ஓய்வு பெற்றுச் செல்லும் தளபதிக்கான பிரிய விடை நிகழ்வு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்த அவர்கள் பனாகொடையில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் வைத்து 06 ஆம் திகதி வௌளிக்கிழமை தனது கடமையை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவருக்கு படையினரால் படைத் தலைமையக வளாகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி நுலைவாயிற் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பௌத்த மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் உத்தயோக பூர்வ ஆவனத்தில் கையெழுத்திட்டு தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.

இப் புதிய தளபதி படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார்.

அதனைத் தொடர்ந்து புதிய மேற்கு தளபதி அவர்கள் தனது பணிகள் மற்றும் கடமைகளை தொடர்பாக படையினர்களுக்கு உரையாற்றினார். அத்துடன் நாட்டினுடைய நலனுக்காக இராணுவத்தினரின் பங்களிப்புகளை மேம்படுத்தி ஒரு குழுவாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை படையினருக்கு சுட்டிக்காட்டினார்.

மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்த அவர்கள் இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியாக கடமையாற்றினார். அவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறவிருந்த மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

அத்துடன் ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே அவர்களுக்கு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வைத்து இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் நுலைவாயிற் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டன. பின்னர் அவர்களால் பனாகொடை இராணுவ முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு பரிசோதனை கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே அவர்கள் வியாழக்கிழமை (5), ஆம் திகதி மேற்கு பாதுகாப்பு படையினரின் மத்தியில் உரையாற்றியதுடன், தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார். அவர் தனது கடமை காலத்தில் படையினரால் அவருக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு அனைத்து படையினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த இரண்டு நிகழ்விலும் மேற் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14ஆவது மற்றும் 61 ஆவது பாதுகாப்பு படை பிரிவின் படைத் தளபதிகள், படைப் பிரிவுகளின் கட்டளை தளபதிகள்,கட்டளை அதிகாரிகள், மற்றும் படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். Sneakers Store | UK Trainer News & Releases