21st November 2023 21:26:36 Hours
மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11வது ஆண்டு நிறைவை முன்னிட்டு , மாத்தறை திஹகொட ஆரம்ப பாடசாலையில் 613 வது காலாட் பிரிகேட்டின் 9 வது சிங்கப் படையணி மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி இணைந்து 61 காலாட் படைப் பிரிவின் ஆசீர்வாதத்துடன் மருத்துவ முகாமை 2023 நவம்பர் 18 ஆம் திகதி நடாத்தினர். மாத்தறை திஹகொட பகுதியில் வசிக்கும் 650 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததுடன் 100 உலர் உணவுப் பொதிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கினர்.
இந்த சமூகம் சார்ந்த திட்டத்திற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டபின் படிப்பு ஆலோசனை நிபுணத்துவ சேவைகள் சங்கம், நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனை, மற்றும் நாரஹேன்பிட்டி ஆசிரி வைத்தியசாலையின் ஆய்வக கூடம் ஆகியன ஒத்துழைப்பு வழங்கினர்.
வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்ட திஹகொட பிரதேச செயலகப் பகுதியிலுள்ள மக்களின் சுகாதாரம் மற்றும் சுகாதாரத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
மருத்துவக் குழுக்கள் நோயாளர்களைப் பரிசோதித்து, பரிந்துரைத்து மருந்துகளை வழங்கினர். மற்றும் தனித்தனியாக கண் மருத்துவம், பல் மருத்துவம், உடலியல் ஆலோசனை, குடும்ப ஆலோசனை, வணிக ஆலோசனை மற்றும் ஆயுர்வேத சிகிச்சை சேவை ஆகிய சேவைகள் வழங்கப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 61 காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எ.ஜே.என் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ,பிரிகேடியர் பொது பணி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டபின் படிப்பு ஆலோசனை நிபுணத்துவ சேவைகள் சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட உளவியலாளர் கலாநிதி சாமர லியனகே, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.