Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2021 20:57:49 Hours

மேயர்கள் கொவிட் தடுப்பு செயலணி தலைவருடன் கருத்து பரிமாற்றம்

இன்று பிற்பகல் (11) ராஜகிரிய கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் மேயர்கள் குழுவுடன் நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலில் தற்போது நடந்து கொண்டிருக்கும் தடுப்பூசி வழங்கல் திட்டங்களின் ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்திக் கூறுகள் தொடர்பாக ஆரயப்பட்டது.

கூட்டத்திற்கு கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ்.மஹேந்திர அர்னால்ட், பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மதுர விதானகே ஆகியோர் தலமையில் இடம்பெற்றது.

இங்கு செயலணி தலைவர் விளக்குகையில் தினசரி புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை, பயணக் கட்டுப்பாடுகள் விதித்தல், இறப்புகளின் அதிகரிப்பு, மூன்று வகையான தடுப்பூசிகள், தடுப்பூசி பொறிமுறை, கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இராணுவத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் அவர்களின் பங்கு, 17,000 க்கும் மேற்பட்ட கட்டில்களைக் கொண்ட புதிய இடைநிலை பராமரிப்பு நிலையங்களின் மேம்பாடுகள், நடைமுறைகள், திறன் மேம்பாடு மற்றும் முழுமையான நோய்த்தடுப்புத் திட்டங்கள் தொடர்பாக தற்போதைய நிலைமையை தௌிவுப்படுத்தினார்.

இந்த கலந்துரையாடலின் போது மேயர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் தற்போதுள்ள நடைமுறைகளின் பல்வேறு மேம்பாடுகள் குறித்து கருத்துக்களை முன்வைத்தனர். அவர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்லுவதாக உறுதியளித்தார். அவர்கள் தேவை என்று கருதும் சில ஒருங்கிணைப்பு நடைமுறைகளையும் அவர்கள் பரிந்துரைத்தனர். தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீரவும் இந்த அமர்வில் பங்கேற்றார்.