Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2021 21:10:59 Hours

மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு சாலியபுரவில் நிலை சின்னங்கள் அணிவிப்பு

பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரைக்கமைவாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களினால் நிலையுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல்களுக்கு 72 வது இராணுவ தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (9) பிற்பகல் சாலியபுராவில் உள்ள 'கெட்டீரியன்ஸ் இல்லத்தில்' நிலை உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கான நிலைச் சின்னங்கள் இராணுவ தளபதியால் அணிவிக்கப்பட்டது.

இதன்போது அவர்களது தொழில்முறை பணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பணிகள் மற்றும் அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட இலக்குகள் என்பன தொடர்பிலும் எண்ணங்களை பகிர்ந்துகொண்ட தளபதி அவர்களது இலக்குளை அடைந்துகொண்டமையினாலேயே அவர்கள் மேஜர் நிலைக்கு நிலை உயர்வு பெற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இராணுவ தலைமையகத்தின் போர்க்கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணியின் மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க, முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி இலங்கை இராணுவ பொலிஸ் படையின் மேஜர் ஜெனரல் அனில் இலங்ககோன், இராணுவ புலனாய்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் இராணுவ புலனாய்வு படையின் மேஜர் ஜெனரல் ரொபின் ஜயசூரிய, இராணுவ அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்கான தளபதி கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் சஞ்சய பெர்னாண்டோ, 58 வது படைப்பிரிவு தளபதி விஜயபாகு காலாட் படையின் மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரி இலங்கை சிங்கப்படையின் மேஜர் ஜெனரல் தினேஸ் நாணயக்கார, 66 வது படைப்பிரிவு தளபதி இலங்கை பீரங்கிப் படையின் மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் 52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க ஆகியோருக்கே மேற்படி நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.