Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2023 20:47:26 Hours

மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி குலதுங்க அவர்களுக்கு அவரது படையணி தலைமையகத்தில் பாராட்டு

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள், திங்கட்கிழமை நவம்பர் 06 ஆம் திகதி இலங்கை கவச வாகன படையணி தலைமையக ரொக் ஹவுஸில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவ மரியாதை மற்றும் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

சிரேஷ்ட அதிகாரிக்கு படையணி தலைமையக படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் இரண்டு நட்சத்திர ஜெனரல் நிலை உயர்வு பெறுவதற்கு உதவிய ஓய்வு பெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் படையணியின் சிப்பாய்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். தனது உரையின் போது, அவர் இராணுவ வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் அவரது பல மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூர்ந்தார்.

இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.