Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th July 2021 18:02:43 Hours

மேஜர் ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன, கொமாண்டோ படையணியின் புதிய படைத் தளபதியாக பதவியேற்பு

கணேமுல்ல கொமாண்டோ படையணியின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன செவ்வாய்க்கிழமை 29 ஆம் திகதி புதிய காதார வழிமுறைகளை பின்பற்றி கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

சில சிரேஸ்ட அதிகாரிகளும் அவரது புதிய காரியாலய கடமைகளை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

மேஜர் ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன தற்போது தியதலவா கல்வியற் கல்லூரியின் தளபதியாக உள்ளார். 1988 பிப்ரவரி மாதம் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையின் பயிலிளவல் அதிகாரியாக பாடநெறி 29 ல் இணைந்துக் கொண்ட அவர் 1989 டிசம்பர் மாதம் கமாண்டோ படையணிக்கு தனது சொந்த விருப்பத்தின் பேரில் நியமிக்கப்பட்டார்.

அவர் ஐக்கிய இராச்சியத்தின் மதிப்புமிக்க ராயல் மிலிட்டரி அகாடமி சாண்ட்ஹர்ஸ்டின் (ஆர்.எம்.ஏ.எஸ்) பழைய மாணவரும் ஆவார். ஆர்.எம்.ஏ.எஸ்ஸில் பயிற்சி பெற்ற முதல் கமாண்டோ அதிகாரி இவர்.