Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd July 2021 14:24:07 Hours

மேஜர் ஜெனரல் (ஓய்வு) யூ.ஏ. கருணாரத்ன இயற்கை எய்தினார்

இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையின் மேஜர் ஜெனரல் (ஓய்வு) யு.ஏ. கருணாரத்ன கொழும்பு 5 இல் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (1) தனது 80 வது வயதில் காலமானார்.

தனது இராணுவ வாழ்க்கையில், கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைத் தளபதியாகவும், நிர்வாகம் மற்றும் பொதுப்பணி பணிப்பாளராகவும் 31 வது படைப்பிரிவின் தளபதியாகவும், இராணுவ தலைமையக செயலாளரகவும், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான தளபதியாகவும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார்.

அவரது பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக பொரளை ஜயரதன மரணச் சேவை நிறுவனத்தின் மரியாதைக்குரியவர்களுக்கான ‘தி ரெஸ்பெக்ட்’ தளத்தில் வைக்கப்படடுள்ளதுடன், இறுதி கிரியைகள் இராணுவ மரியாதைகளுடன் சனிக்கிழமை (3) மாலை 5.00 மணிக்கு கொழும்பு பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.