26th August 2020 03:26:58 Hours
இலங்கை, மின் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் படையணியானது, அதன் சிறந்த ஓய்வுபெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான முன்னாள் கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி படைத் தளபதி தளபதி மேஜர் ஜெனரல் அஜித் எல்வத்த அவர்களுக்கு ஓகஸ்ட் 14 ஆம் திகதியன்று தனது ஓய்வினை முன்னிட்டு பிரியாவிடை வழங்கியது. அவர் இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவையினை கொண்டுள்ளதுடன், இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியை சேர்ந்தவராவார்.
மேஜர் ஜெனரல் அஜித் எல்வத்த அவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான கட்டளை நியமனங்கள் மற்றும் பணியாளர் நியமனங்களை வகித்து இலங்கை இராணுவம் மற்றும் தேசத்திற்கு சேவை செய்துள்ளார்.விடைபெறும் அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டதோடு, அவர் புகைப்படம் மற்றும் இலங்கை, மின் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் படைத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் அனைத்து அதிகாரிகளுடனும் கலந்து கொண்டார்.
மின் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் பணிப்பாளர் பிரிகேடியர் இந்து சமரகோன், மத்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர் நிலான ஹேரத், பதவிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அனைத்து பட்டாலியன்களிலும் உள்ள இராணுவச் சிப்பாய்கள் உட்பட பலர் இப்பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டனர். Running sneakers | Nike Off-White