30th January 2024 19:39:45 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. ஜானகி லியனகே அவர்களின் பணிப்புரையின் கீழ், மென்னிங் டவுனில் உள்ள சேவை வனிதையர் மகளிர் அழகு நிலையத்தில் விரிவாக்கல் மற்றும் நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் நவீன அழகுகலை வசதிகள் மற்றும் உபகரணங்களை இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உயர்மட்ட சேவையை வழங்குவதாகும்.
திருமதி ஜானகி லியனகே அவர்கள் 29 ஜனவரி 2024 ம் திகதியன்று அழகு நிலையத்தின் புனரமைப்புகளை நேரில் பார்வையிட்டதுடன், திட்டத்தை மேலும் மேம்படுத்தவும், வெற்றிகரமாக முடிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.