Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2021 15:00:35 Hours

முழங்காவில் 19 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணியின் புதிய அலுவலக கட்டிடம் திறப்பு

முழங்காவில் 19 வது இலங்கை இலேசாயுத காலாட்படை தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய அலுவலக கட்டிடம் கடந்த வெள்ளிக்கிழமை (17) ம் திகதி யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையக தளபதியும், இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு திறந்து வைத்தார். 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்ணல் ஏடிஎல். செனவிரத்னவின் வழிகாட்டுதலின் மற்றும் மேற்பார்வையின் கீழ் புதிய அலுவலக கட்டிடம் அனைத்து அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது.

அதன் பிறகு அதிகாரிகள் உணவறை திறப்பு விழா மங்கள விளக்கேற்றல் குறித்த வளாகத்தில் மரக்கன்று நாட்டல் என்பவற்றுடன் இடம்பெற்றது. பின்னர் குழு புகைப்படத்தை எடுத்துக் கொண்ட அன்றைய பிரதம அதிதியான யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களுக்கு கட்டளை அதிகாரியினால் சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நடைபெற்றது.