Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2019 18:01:27 Hours

முல்லைத் தீவில் நத்தார் நிகழ்வுகள்

நத்தார் தினத்தை முன்னிட்டு (25) ஆம் திகதி புதன் கிழமை முல்லைத் தீவு படையினரின் ஒத்துழைப்புடன் கரோல் கீத நிகழ்வுகள் கத்தோலிக்க நம்பிக்கையின் மக்களில் பங்களிப்புடன் முல்லைத் தீவு தேவாலய ஏற்பாட்டின் இடம்பெற்றன.

முல்லைத் தீவு உள்ள பனித பீட்டர் தேவாலயத்தில் ஆயர் ஜோர்ஜ், பாரிஷ் பாதிரியார்கள், கிறிஸ்தவ சகோதரிகள், பல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டதுடன், முல்லைத் தீவு முன்னரங்க பாதுகாப்பு படையனியின் படைத் தளபதி, கட்டளை தளபதிகள், படைப் பிரிவுகளின் தளபதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் யாழ் பாடகர்களின் நத்தார் பாடல்கள் , மாணவர்களின் நடன அம்சங்களுடன் இந்த நிகழ்வு மேலும் வண்ணமயமாக்கப்பட்டது. இந் நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு இலங்கை கோளரங்க பணிப்பாளர் திருமதி அருணபிரப பெரேரா மற்றும் அங்கத்தவர்களால் நிதியுதவியுடன் மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்பட்டன. latest Running | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp