16th November 2021 21:24:51 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 572 வது பிரிகேடின் சிப்பாய்களால் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் வருமானத்திற்கான வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் வகையில் அண்மையில் முல்லைத்தீவு பிரபந்தல்லாறு குளத்தில் இரண்டாம் கட்டமாக 75,000 மீன் குஞ்சுகளை விடுவித்தனர்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் ஆசிர்வாதங்களும் இத்திட்டத்திற்கு கிட்டியிருந்தோடு, பின்தங்கிய நிலையில் வாழும் மீனவக் குடும்பங்களின் வருமான வழிமுறைகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இத் திட்டத்தின் மூலம் பிரபந்தல்லாறு பகுதியில் உள்ள இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பயனடைகின்றனர்.
57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் பணிப்புரையின் பேரில் இத்திட்டம் சில காலங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு, முல்லைத்தீவிலுள்ள இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிருத்தி அதிகாரசபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்கான வழிகாட்டல் 572 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால அவர்களினால் வழங்கப்பட்டது.
வடமாகாண மீன்வளர்ப்பு அதிகாரசபை அதிகாரி திரு.எஸ்.சங்கீதன், பிரதேச நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகாரி மற்றும் மீனவ சமூகத்தினர் ஆகியோர் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.