14th January 2020 14:35:06 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பௌத்த தேரர்களின் அனுசரனையில் ஒட்டுசுட்டானிலுள்ள சமன்குளம் கலவன் பாடசாலை மற்றும் சின்னதம்பி கல்லூரியில் கல்விகற்கும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இம் மாதம் (9) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
அமெரிக்காவின் நியூஜோர்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவிலுள்ள பௌத்த விகாராதிபதி மதிப்புக்குரிய கும்பலோலுவே விமலஜோதி தேரர் மற்றும் மினுவங்கொட லும்பினி விகாரையின் விகாராதிபதி மதிப்புக்குரிய காலே பியானந்த தேரர் அவர்களின் அனுசரனையுடன் 104 மாணவர்களுக்கு அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் இந்த நிகழ்வினூடாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீரத்தி கொஷ்தா அவர்கள் வருகை தந்து சிறப்பித்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வின் ஊடாக சா.பொ தராதர பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு உதவி நிதித் தொகை வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வானது 23 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பூரன ஒத்துழைப்புடன் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். spy offers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092