Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd October 2021 14:45:46 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகம் தெற்கு மக்களின் அனுசரணையுடன் நான்கு வீடுகள் நிர்மாணம்

இராணுவ தலைமையகத்திற்கு ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகம் வீடற்ற பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வீடு நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வெவ்வேறு பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நான்கு வீடுகளை பயனாளிகளுக்கு 72 வது இராணுவ ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒக்டோபர் 10 ம் திகதி கையளித்தது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தவைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டியவின் அறிவுறுத்தலின் படி செவ்வாய்க்கிழமை (12) 64 வது படைபிரிவினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு விழாவில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டார் 54 மண்ணங்கண்டல் கிராம சேவகர் பிரிவின் கிரணமடு மண்ணங்கண்டல் பிரதேசத்தில் வசிக்கும் திருமதி ராமச்சந்திரன் மதிவதினி என்பவருக்கான இந்த புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான நன்கொடையாக ரூ .4 லட்சம் பௌத்த துறவிகளான வண. வெல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் வண. பிலியந்தல அமிதகோஷ தேரர் ஆகியோரால் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் மனிதவளத்தையும் 641 வது பிரிகேட்டின் 14 வது இலங்கை சிங்கப் படையனினர் வழங்கினர்.

கொழும்பில் வசிக்கும் திரு. டான் லக்ஷ்மன் ஜெயமஹ மற்றும் திருமதி ஷர்மணி லக்ஷ்மன் ஆகியோரின் ரூபா 6,50,000.00 நிதி நன்கொடையில் மாங்குளம் மண்வளப்பட்டமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் திரு விக்னேஷ்வரனுக்கு 642 வது பிரிகேட்டின் 23 வது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவினர் ஒத்துழைப்பில் புதிய வீடு அமைக்கப்பட்டது.

அதே நன்கொடையாளர்களான திரு. டான் லக்ஷ்மன் ஜெயமஹ மற்றும் திருமதி ஷர்மணி லக்ஷ்மன் அவர்களின் ரூபா. 450,000.00 நன்கொடையில் 642 வது பிரிகேட்டின் 23 வது விஜயபாகு காலாட்படை படையினரின் உதவியுடன் 61 ஒட்டுசுட்டான் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் திரு ஆர் சந்திர குமாருக்கு புதிய வீடு நிர்மானிக்கப்பட்டது. அதேபோல், அமெரிக்காவில் வசிக்கும் திருமதி நிலூக்ஷி ராஜபக்ஷ வழங்கிய ரூபா. 400,000 நன்கொடையில் 55 முத்துஐயன்கட்டுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் திருமதி ராசரத்தினம் ராஜேஸ்வரிக்கு. 643 பிரிகேட்டின் கீழ் உள்ள 13 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மூலம் வீடு நிர்மாணிக்கும் பணி முன்னெடுக்கபட்டது.

முல்லைத்திவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட நான்கு வீடுகளுக்குமான கட்டிடப் பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மரங்கள், செங்கற்கள் மற்றும் பிற வன்பொருட்கள் என்பன நன்கொடையாக கிடைக்கபெற்றன. அதே நாளில் (12), முத்துஐயன்கட்டுக்குளம் கிராம சேவையாளர் பிரிவு பகுதியில் வசிக்கும் இராணுவம் மற்றும் பொதுமக்கள் பாவனைக்காக 100,000 ரூபாய் செலவில் இராணுவ படையினரால் நிர்மானிக்கபட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய மற்றும் 64 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யுஆர் வீரகோன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த வீட்டுத் திட்டங்கள் படையினரால் திறமையாக முன்னெடுக்கப்பட்டன. 641 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிபிஜேசி ஜயவர்த்தன, 642 வது பிரிகேட் தளபதி கேணல் கேடிபி டீ சில்வா 14 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சி டி அதுல்தொர ஆராச்சி, 23 வது விஜயபாகு காலாட்படையணி கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஏபிஎஸ் அத்துகோரல மற்றும் 13 வது தேசிய பாதுகாப்பு படையணி கட்டளை அதிகாரி மேஜர் எஸ்எல் துசார ஆகியோர் தங்கள் படையினரின் ஒத்துழைப்பில் இவ்வீட்டுத் திட்ட நிர்மாண பணிகளை நிறைவு செய்தனர்.