Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2021 16:28:08 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மேலும் இரண்டு புதிய வீடுகள்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான வீடு நிர்மாணிக்கும் திட்டங்கள் இராணுவத் தலைமையகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள கோகிலை மற்றும் கர்நாடககேணி ஆகிய பிரதேசங்களில் மேலும் இரண்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 593 வது பிரிகேட்டின் 19 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 வது( தொண்) இலங்கை சிங்கப் படையணியின் படையினர்களால் குறித்த இரண்டு வீடுகள் நிர்மாணிப்பட்தோடு இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (13) அவ்வீடுகளை பளனாளிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த வீடுகளை நிர்மாணத்திற்கான அனுசரணையை கண்டி சில்வெஸ்டரகைல்லுரியின் பழைய மாணவர் அஸங்க வரகாகொட வினால் வழங்கப்பட்டது திருமதி ஷர்மிளா பெர்னாண்டோ அவர்களுக்கான இந்த புதிய வீடு 19 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் கோகிலை ஸ்ரீ சம்போதி விகாரையின் தலைமை மதகுரு வென் திஸ்ஸபுரா ஸ்ரீ குணரத்ன தேரர் அவர்களின் நெருக்கமான ஆலோசனையின் கீழ் கட்டப்பட்டது. இதேபோல், 5 வது (தொண்) இலங்கை சிங்கப் படையணியின் படையினர் தங்கள் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்களைப் பயன்படுத்தி, திருமதி வைராசுந்தரம் கவிஸ்கந்தியின் குடும்பத்திற்கான வீட்டை நிர்மாணித்தனர்.

இதேபோல், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பணி அதிகாரி பிரிகேடியர் வசந்த பலம்கும்புர அவர்களின் ஒருங்கிணைப்புடன், அந்த குடும்பங்களின் இன்றைய பயன்பாட்டிற்கு தேவையான தளபாடங்கள் மற்றும் மின் உபகரணங்களையும் வழங்கினார். முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய விட்டின் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, உரிய குடும்பங்களுக்கு முறையாக வீடுகளை வழங்கினார்.

அதே வேளையில், வென் கல்கமுவே சாந்தபோதி தேரரால் நிதியுதவி செய்யப்பட்ட உலர் ரேஷன் பொதிகளையும் அந்தப் பகுதியில் உள்ள 10 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன, மேலும் அந்த குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொது பணி அதிகாரி, 593 வது பிரிகேட் தளபதி கேணல் விஸ்வாஜித் வித்யானந்த மற்றும் 19 வது கெமுணு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் யு.ஜே.எஸ் சரத்சந்திர, மற்றும் 5 வது வது (தொண்) சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர் அதாவுதா ஆகியோரும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்