14th November 2023 22:26:27 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் 681 ஆவது பிரிகேடின் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் முல்லைத்தீவு சுதந்திபுரம் மகா வித்தியாலயத்தில் மின்சார விநியோகத்தை சீரமைப்பதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த கஷ்ட பிரதேச பாடசாலையின் அதிபர் 681 வது காலாட் பிரிகேட் படையினரிடம் மின்சார விநியோகத்தை சீரமைக்க உதவியை நாடினார். 681 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும்9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் வழிகாட்டுதலுக்கமைய நான்கு நாட்களுக்குள் (5 - 9 நவம்பர் 2023) மின்சார சீரமைப்பு நடவடிக்கையினை படையினர் மேற்கொண்டன.
சிவில்-இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்த திட்டத்தினை பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.