Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2020 15:35:30 Hours

முல்லைத்தீவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சேனவிரத்ன அவர்களுக்கு பிரியவிடை நிகழ்வு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த சேனவிரத்ன அவர்கள் விடைபெற்று செல்லும் முன் முல்லைத்தீவு பாதுகாப்பு படையினரால் 4ஆம் திகதி புதன் கிழமை கௌரவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இப் படைத் தளபதி படையினர் மத்தியில் உரையாற்றுவதற்கு முன்னர் 14 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியின் படையினரால் நுலைவாயிற் மரியாதை, மரியாதை அணிவகுப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும், முல்லைத்தீவு முன்னரங்க பாதுகாப்பு படைத் படைத் தளபதி, படைப் பிரிவின் கட்டளைத் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்விற்கு முன்னர் ,விடைப்பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் ஜயந்த சேனவிரத்ன அவர்கள் 64, 59 ஆவது படைப் பிரிவு தலைமையங்களுக்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை பெப்ரவரி 29- மார்ச் 2 திகதி வரை மேற்கொண்டார்.

மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்கள் விரைவில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு படைத் தளபதியாக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும். trace affiliate link | Women's Sneakers