Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2021 21:16:50 Hours

முல்லைத்தீவு தளபதி தலைமையகத்தின் கட்டளை அலகுகள் தொடர்பில் பரிசீலிப்பு

அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் கிளிநொச்சியில் உள்ள 57 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்திற்கும் அதன் கட்டளை அலகுகளுக்கும் நவம்பர் 10 - 11 ஆம் திகதிகளில் பரீட்சார்த்த விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயங்களின் போது, 571, 573 பிரிகேட் தலைமையகங்கள் மற்றும் அம்பகாமன் படையலகு பயிற்சிப் பாடசாலை உள்ளிட்ட சில பகுதிகளையும் வியாழக்கிழமை (11) அவர் மேற்பார்வை செய்தார்.

571 மற்றும் 573 பிரிகேடுகளின் தளபதிகள் அவருக்கு வரவேற்பளித்து, தங்களது வகிபாகம் மற்றும் பணிகள் குறித்த தெளிவூட்டல்களை வழங்கினார்.

இந்த விஜயத்தின் போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மரக்கன்றுகளை நாட்டி வைத்த பின்னர் விருந்தினர் பதிவேடுகளிலும் எண்ணங்களை பதிவிட்டார்.

இந் நிகழ்வில் மற்றும் பிரிகேட் தளபதிகள் மற்றும் படையலகுகளின் சிரேஸ்ட அதிகாரிகள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.