Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2020 09:01:25 Hours

முல்லைத்தீவு தலைமையகத்தில் மனதைக் குணப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணி புரியும் இராணுவ மூத்த அதிகாரிகளுக்கு கல்வி கற்பதற்கான மன அழுத்தத்தை தணிப்பது மற்றும் மனதை ஊக்குவிப்பது தொடர்பான விரிவுரைகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சி திட்டமானது இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்களின் பரிந்துரைப்பின் பிரகாரம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 35 இராணுவ அதிகாரிகளுக்கு இந்த விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விரிவுரைகள் பிரிகேடியர் ஆர்.எம்.எம் மொனராகல, மேஜர் யூ.ஜி மல்லவராச்சி, கெப்டன் எஸ்.எம்.பி.கே சமரகோன், லெப்டினன் பி.ஏ.சி.பி.கே பெடுராரச்சி, லெப்டினன் எச்.ஜி.என் தேசபிரிய மற்றும் லெப்டினன் எஸ்.வி.ஆர் டி சில்வா போன்ற அதிகாரிகளினால் தடுப்பு மருத்துவம் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் உளவியல் பணியகத்தின் பூரன ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செயலமர்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகம், படைப் பிரிவுகள், படைத் தலைமையக அதிகாரிகள் இணைந்து கொண்டனர். Best Authentic Sneakers | Patike