Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2017 15:29:27 Hours

முல்லைத்தீவுப் படையினரால் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு

முல்லைத்தீவுப் பாதுகாப்புப் படையினரால் முல்லைதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள் கடந்த 4 – 5 ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு முல்லியாவலி வித்தியானந்த வித்தியாலயம் மற்றும் புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் ‘சரசவி மித்துரு’ அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

முல்லியவெலி வித்தியானந்த வித்தியாலயத்தில் கடந்த சனிக் கிழமை (4) ஆம் திகதி இடம்பெற்ற கருத்தரங்கில் 8 பாடசாலைகளிலிருந்து 375 பாடசாலை மாணவர்கள் கலந்து பயண்களை பெற்றனர்.

இந்த கருத்தரங்கில் கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பாக விரிவுரைகள் இடம்பெற்றன.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து 350 பாடசாலை மாணவர்கள் இரண்டாம் நாள் (5) ஆம் திகதி புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கின் ஆரம்ப விழாவிற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியை பிரதிநிதித்துவம் படுத்தி இராணுவ சிவில் ஒருங்கினைப்பு அதிகாரி கலந்து கொண்டார். இந்த கருத்தரங்குகளுக்கான முழுமையான அனுசரனை டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி மற்றும் முல்லைத்தீவு கல்வி அலுவலகமும் இணைந்து வழங்கியது.

Nike shoes | Nike Running