16th August 2021 19:21:31 Hours
உலக பௌத்த பேரவையின் கலாசார குழுவின் பணிப்பாளரும் தாய்வான் ஐக்கிய சமாதி பௌத்த அமைப்பின் ஸ்தாபகரும் இலங்கை தர்ம சக்கர சிறுவர் அறக்கட்டளையின் பணிப்பாளரும் ஜனாதிபதியின் சர்வதேச மத மற்றும் கலாசார அலுவல்கள் ஆலோசகருமான வண. போதாகம சந்திம தேரர் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு 591 வது பிரிகேடின் 24 வது இலங்கை சிங்பப்படை சிப்பாய்களினால் முல்லைத்தீவு சிலாவத்தையிலுள்ள வறிய குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை நிர்மாணித்து கொடுப்பதற்காக நன்கொடையாளர்கள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளால் சனிக்கிழமை (7) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
591 வது பிரிகேடின் 24 வது இலங்கை சிங்கப்படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூஆர் ரொட்டிகோ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவத்தின் வீட்டற்றவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுக்கும் சமூகத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவில் உள்ள சிலாவத்தை கிராம சேவகர் பிரிவில் உடற்பயிற்சி மையம், சிறுவர் பூங்கா மற்றும் சன சமூக நிலையம் ஆகியவற்றை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
59 வது படைப்பிரிவு மற்றும் 591 பிரிகேட் தளபதிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் அதேவேனை, இது 24 வது இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூஆர் ரொட்டிரிகோ அவர்களினால் கண்காணிக்கப்படுகிறது.