24th July 2021 17:30:42 Hours
இராணுவ தளபதியின் “துரு மித்துரு நவ நட்டக்” என்ற எண்ணக்கருவுக்கமைய 2021 ஜூலை மாதம் 20 ம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 படைப்பிரின் கீழுள்ள பொது பகுதிகளில் சேதன பசளை உற்பத்தி தொடர்பிலான இரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
கேப்பாபிலவு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற மேற்படி விழிப்புணர்வு அமர்விற்கு 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் சிப்பாய்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
அதேநேரம், 24 வது இலங்கை சிங்கப் படையினரால் அலம்பில் கமநல சேவை நிலையத்தில் விழிப்புணர்வு அமர்வொன்று நடத்தப்பட்டது.
இந்நிகழ்வுகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் மேற்பார்வையில் 59 வது படைப்பிரிவு தளபதியின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.