Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th April 2021 06:53:22 Hours

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 103 தனிமைப்படுத்தல் மையங்களில் 10,098 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

இன்று (16), காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 212 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 45 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 167 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் அதிகபடியாக 33 பேர் குருநாகல் மாவட்டத்திலும், 32 பேர் களுத்துறை மாவட்டத்திலும், 31 பேர் கம்பஹா மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களில் 71 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி (16) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 95,948 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 91,136 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 92,307 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 3,033 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 157 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை நான்கு ஆகும். அதன்படி (16) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 608 ஆகும்.

மேலும், (16) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 103 தனிமைப்படுத்தல் மையங்களில் 10,098 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (15) 3,417 பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Authentic Sneakers | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger