12th May 2020 18:23:59 Hours
சென்னையில் இருந்து 320 பேர் இன்று மதியம் 12 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என 12 ஆம் திகதி கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் பூனானை (50), பம்பைமடு (32),ஹோட்டல் டொல்பின் (11), மற்றும் நாச்சிக்குடா (28) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 121 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று 12 ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். இன்று 12 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் 7515 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தற்பொழுது நாடுபூராகவுமுள்ள முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 37 தனிமைப்படுத்தல் மையங்களில் 3701 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அதனடிப்படையில் இன்று 12 ஆம் திகதியுடன் கோவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 428 ஆகும். குணமடைந்த 41பேர் பேர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொற்றுக்குள்ளான 387 கடற்படை வீரர்கள் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றன்ர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -7515
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -3701
தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 37 Running Sneakers | Womens Shoes Footwear & Shoes Online