Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2021 20:58:38 Hours

முன்னாள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் தற்பொழுது 1 வது இராணுவ படையணி செயல்பாட்டு தலைமையகமாக இயங்குகிறது

1 இலங்கை இராணுவ படையணியாக உறுவாக்கப்பட்ட கிளிநொச்சியை தலைமையகமாக கொண்ட அப்படையணித் தலைமையகமானது, தேசத்தின் முன்னேற்றத்திற்கான அவசர சூழ்நிலைகளில் விரைந்து செயல்படும் ஒரு முக்கிய நடமாடும் பாதுகாப்புப் படையணியாகவும், அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஒரு படையணியாகவும் செயல்படும் ஒரு பெரிய நடமாடும் படையணியாகும் என்பதோடு அப்படையணியின் திறப்பு விழா நிகழ்வு (17) இடம்பெற்றது.

கிளிநொச்சி முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் 2020-2025 முன்னோக்கு வழி மூலோபாய கொள்கைத் திட்டத்தின் மூலகருத்தாவாக விளங்கும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்து கொண்டார் . அங்கு வருகை தந்ந ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நுழைவாயிலில் வைத்து 1 இலங்கை இராணுவ படையணியின் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது

1 இலங்கை இராணுவ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, அன்றைய பிரதம விருந்தினரை அன்பாக வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அன்றைய தலைமை விருந்தினர் பாரம்பரிய எண்ணெய் விளக்கை ஏற்றி படையணி அலுவலகத்தை திறந்து வைத்ததுடன் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் இராணுவ தளபதியின் வருகையை பாராட்டி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு ஒரு சிறப்பு நினைவு பரிசு வழங்கினார்.

மற்றும் அன்றைய விழா நிறைவடைவதற்கு முன்பு தலைமை விருந்தினரால் புதிய தலைமையக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டதை அடுத்து நினைவு சேர்க்கும் வகையில் அனைவரும் குழு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டனர்.

(மேலதிக விபரங்களுக்கு புகைப்பட செய்தியை பார்க்கவும்)