Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th April 2021 22:12:38 Hours

முன்னணியில் பணிபுரியும் இராணுவத்தினருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாம் மாத்திரை வழங்கல் ஆரம்பம்

நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் செயற்பாட்டில் முன்னணியில் பணியாற்றும் இராணுவத்தினருக்கான 'அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்' தடுப்பூசியின் இரண்டாம் மாத்திரை வழங்கல் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் இன்று (28) காலை தொடங்கியது.

இலங்கை இராணுவ வீரர்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் கொவிட் பாதிப்பாளர்களை குணப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர். அதே வேளையில் அதன் பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக பங்களிப்பு செய்கிறார்கள், அதன்படி நாட்டின் 15 இராணுவ மருத்துவமனைகளில் ஊடாக இறுதி 2 வது கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்படுகின்றது. கொவிட் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டில் முன்னணியில் செயற்பட்ட இராணுவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஜனவரியில் இராணுவத் தளபதியின் முயற்சிகளினால் தொடங்கப்பட்டது.

இதேபோல், அனைத்து நாடு முழுவதும் உள்ள இடைநிலை பராமரிப்பு மையங்கள், தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் முன்னணி சுகாதார ஊழியர்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவ மருத்துவ குழுக்கள் இரண்டாவது கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கல் இன்று (28) கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மைத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது.