28th November 2024 15:02:41 Hours
நாடு முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகள் 2024 நவம்பர் 27 அன்று திறக்கப்பட்டதால், வசந்திபுரம் கிராமத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் 72 குடும்பங்களை பாதித்ததுடன் 129 நபர்கள் இடம்பெயர்ந்தனர்.
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 593 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், இராணுவ படையினர் உடனடியாக இடம்பெயர்ந்த குடும்பங்களை மண்ணங்கண்டல் கலவன் பாடசாலையில் தங்க வைத்ததுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து உடனடி நிவாரணம் வழங்கினர்.
குழான்முறிப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட அவர்களை 592 வது காலாட் பிரிகேட் படையினர் வெற்றிகரமாக மீட்டனர். மீட்பு பணிகளை தொடர்ந்து வருகையில் அவர்கள் பாதிக்கப்பட்ட வனத்துறை காப்பாளர் திரு டி.எம்.எஸ் அஜித் குமார, அவரது மனைவி மற்றும் அவர்களது 9 மாத கைக்குழந்தை உட்பட, சிக்கித் தவிக்கும் குடும்பத்தை சந்தித்ததுடன் அவர்களையும் அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர்.