Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th July 2020 15:13:13 Hours

முதியோர்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும், கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ உபகரண மாஸ்டர் ஜெனரல் கிளை மற்றும் விநியோகம் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தினரால் 4 ஆம் திகதி சனிக்கிழமை முதியோர் இல்லங்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கியிருக்கும் அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் இலங்கை சுங்க பிரிவனர் விநியோகிப்பதற்காக விடுவித்த பின்னர் படையினரல் 20,000 பச்சை ஆப்பிள்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்துடன் தொடர்பு கொண்ட இலங்கை சுங்கம் பிரிவினர் இறக்குமதி செய்யப்படாத இந்த பச்சை ஆப்பிள்களை இராணுவத்தினருக்கு வழங்கி வைத்தனர். விநியோகம் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஹிரோஷா வனிகசேகர அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர் நாடு முழுவதும் பணியாற்றும் படையினர்களுக்கு விநியோகிப்பதற்காக முதலில் இந்த பச்சை ஆப்பிள்கள் இராணுவ தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பின்னர், இராணுவ உபகரண மாஸ்டர் ஜெனரல், மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக அவர்கள் , ராஜகிரிய விக்டோரிய முதியோர் இல்லம், பெளத்தலோக்க வீதியில் அமைந்துள்ள சத்ய முதியோர் இல்லம், பம்பலப்பிட்டியில் உள்ள மல்லிகா முதியோர் இல்லம், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை, குழந்தைகள் மற்றும் இன்னும் சில அனாதை இல்லங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விநியோகத்தின் போது, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 ஆவது படைப் பிரிவின் படையினர், உபகரண மாஸ்டர் ஜெனரல் கிளையினூடாக பச்சை ஆப்பிள்களை பெற்றுகொன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாப்பு படை தலைமையகங்களுக்கும் பயிற்சி பாடசாலைகளுக்கும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் வழங்குவதற்கு உபகரண மாஸ்டர் ஜெனரல் கிளை உபகரண மாஸ்டர் ஜெனரல் கிளை விநியோகிப்பதற்கு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் எச்.எம்.பி.பி ஹங்கிலிபொல, உட்பட 14 ஆவது படைப் பிரிவின் கட்டளை பொது அதிகரிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth