08th August 2021 12:31:57 Hours
24 வது படைப்பிரிவு தலைமையகத்தின் புலனாய்வுப் படையினர் வழங்கிய தகவலுக்கமைய முதலாவது கமாண்டோ படை மற்றும் பொத்துவில் பொலிஸார் இணைந்து புதன்கிழமை (4) பொத்துவில் வடக்கிலுள்ள ஹுலன்னுகே பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்சா செய்கை சுற்றிவளைக்கப்பட்டது.
பயிர்ச் செய்கையினை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 24 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவகே மற்றும் 242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திக பீரிஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
1/4 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சட்டவிரோத பயிர் செய்கையில் சுமார் 7000 மரக்கன்றுகள் நடப்பட்டிருந்ததோடு வனப் பகுதிக்குள் ரகசியமான முறையில் கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.