Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2021 14:00:32 Hours

முதலாவது இலங்கை பொறியியல் சேவை படையினரால் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வைத்தியசாலை மறுசீரமைப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திடம் பொரளையில் உள்ள டி சொய்சா மகப்பேறு வைத்தியசாலையின் அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைகமைய கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டும் கட்டிடமொன்று முதலாவது பொறியியல் சேவை படையணியினால் புனரமைக்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள கெரிசன் பொறியியல் படையினரின் பங்களிப்புடன் கட்டிடத்தின் புனரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த வார்டுகள் கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும், இக்கட்டிடம் புனரமைக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலையின் அதிகாரிகளிடம் முறையாக கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (16) இடம்பெற்றது.